Description
இஸ்லாமிய சட்டப் பின்னணியில் குடும்பப் பொருளாதாரப் பராமரிப்பு
மிஷ்காத் ஆய்வுக் குழு
மிஷ்காத் ஆய்வு நிறுவனம் -கொழும்பு
குடும்பமானது சமூகம் என்ற கட்டிடத்தின் ஓர் அலகு அல்லது ஒரு செங்கல். குடும்பத்தின் பலமே சமூகத்தின் பலமுமாகும். அந்த வகையில் அமைந்ததுவே உறவினர் பராமரிப்பு பற்றிய இறை வழிகாட்டலாகும். வசதிபடைத்தவர்கள் தமது குடும்பத்தில் வறுமை நிலையிலுள்ள அல்லது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாத இரத்த உறவினர்களுக்கு செலவழிப்பது கடமையாகும் என்பதே அவ்வழிகாட்டலின் சுருக்கமாகும். அதனை மிகச் சரியாக முன்னெடுக்கும் பொறுப்பு அல்லது கடமை முஸ்லிம் சமூகத்திற்கு உரியதாகும். முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமியத் துறை சார்ந்தோரும் புத்திஜீவிகளும் இது பற்றி ஆழ்ந்த கவனம் செலுத்துவது மிக முக்கியமான கடமையும் பொறுப்புமாகும்.
அந்த வகையில், குத்பாக்களிலும், மத்ரஸா பாடத்திட்டங்களிலும், முஸ்லிம் தனியார் சட்டப் பகுதியிலும் இந்த இறை வழிகாட்டல்களும் சிந்தனைகளும் உரிய இடம் பெறுவதற்கு அவர்கள் தம்மாலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.








Reviews
There are no reviews yet.