Description
இலங்கையில் மத்ரஸா கல்வி | Ilankaiyil Madrasa Kalvi
நூலாசிரியர் வரலாறு, சர்வதேச உறவுகள், கல்வி ஆகிய புலங்களில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வருபவர். பாடசாலை. பல்கலைக்கழகம், மத்ரஸா மூன்று நிறுவனங்களிலும் மாற்றத் திற்காகவும் மறுசீராக்கத்திற்காகவும் முனைப்புடன் உழைத்து வருபவர். பாதிஹ் உயர் கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டக் குழுவில், பணிப்பாளர் சபையில், கல்விச் சபையில் அங்கத்த வராக இருந்து செயற்பட்ட கலாநிதி றவூப் ஸெய்ன் அதன் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.
கடந்த 10 ஆண்டுகள் இடைவெளியில் குரிகொடுவ ஹாதியா, அக்கரைப்பற்று மன்பஉல் கைராத், ஓட்டமாவடி பாதிமா ஸஹ்ரா, புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரிகளில் அதிதிச் சொற்பொழிவாளராக (Guest Lecturer) பலமுறை பங்கேற்றுள்ள அவர் மாவனெல்லை ஆயிஷா ஸித்தீக்கா உயர் கல்வி நிறுவனத்தில் ஓர் அதிதி விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
மத்ரஸா கல்வி தொடர்பில் இரண்டு ஆய்வுகளை 2012 யிலும் 2020 யிலும் அவர் மேற்கொண்டுள்ளார். அந்த ஆய்வுகளின் விரிவான எழுத்தே இந்த நூலைச் சாத்தியமாக்கி யுள்ளது. முஸ்லிம்களுக்கான செயலகம் (Secretariate for Muslims) 2015 இல் முன்னெடுத்த மத்ரஸாக்களில் விழுமியக் கல்வியை (Value Education) உள்ளீர்த்தல் எனும் செயற் திட்டத்தின் (Project) பிரதான வளவாளராகப் பங்கு வகித்த அவர் 2020 இல் கேகாலை, கம்பஹா மாவட்டங்களைத் தழுவிய மத்ரஸாக்களின் கலைத்திட்டம் குறித்த விரிவான ஆய்வொன்றை முன்னெடுத்தார். தற்போது கிழக்கிலங்கை மத்ரஸாக்களில் சமாதானக் கல்வியை (Peace Education) உள்ளீர்த்தல் என்ற பணித்திட்டத்தில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றார். சமகால இலங்கை முஸ்லிம்களின் கல்வி, வரலாறு, சமூகவியல் ஆகிய புலங்களில் அவர் இதுவரை 10 நூல்களை எழுதியுள்ளார். இது அவரது அறுபதாவது நூலாக்கம் என்பது கவனிப்புக்குரியது.
இந்நூல்
மத்ரஸா கல்வியின் கடந்த கால வரலாற்றையும் சமகாலத்தையும் விரிவாகப் பேசுகின்றது. அதைக் கடந்து வருங்காலத்திற்குத் தேவையான பரிந்துரைகளை கனிவான அணுகு முறையில் முன்வைக்கின்றது. மத்ரஸா நிருவாகத்தினர். விரிவுரையாளர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரும் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டிய பல பக்கங்களை இந்நூல் விரித்து வைக்கின்றது.
சமூக விஞ்ஞானங்களுக்கான
இப்னு கல்தூன் ஆய்வகம்













Reviews
There are no reviews yet.