Description
‘மறுமை நாள்’ எனும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மறுமை நாள் பற்றிய பன்முகப்பார்வை இந்நூலிலே தென்படுவது. அது சார்ந்த ஏனைய நூல்களிலிருந்து இந்நூல் வேறுபட்டிருப்பதை உணர்த்துகிறது. 15 தலைப்புகளின் கீழ் மறுமை நாள் குறித்த ஒரு மொத்தப்பார்வை இங்கு முன்வைக்கப்படுகிறது. ஆதாரங்கள் அதற்கு வலுசேர்க்கின்றன. புதிய புரிதல்களும், விளக்கங்களும் கிடைக்கின்றன. வாசிக்கும் பொழுது ஆன்மாவுக்கு ஆறுதலும், அறிவுக்கு உட்சாகமும் தருகின்றது.
மறுமையின் கண்கொள்ளா காட்சிகளையும், கொடுமையான நிகழ்வுகளையும் மிகத்தெளிவாக அல்குர்ஆன், ஸுன்னா ஆதார விளக்கங்களுடன், வாசகர் எவரும் இலகுவாக புரிந்துகொள்ளத்தக்க மொழிநடையில், வாசிக்கும் பொழுதே மறுமையின் மனக்காட்சி. மரணத்திற்கு முன்னரே மறுமையை காண்பது போன்றதான உள்ளுணர்வு அத்தனையையும் இந்நூலில் அருமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் சகோதரர் இஸட்.ஏ.எம்.பவாஸ். அல்லாஹ் அவரது முயற்சிகளைப் பொருந்திக் கொள்வானாக.
அஷ்ஷெய்க் எம்.டி.எம்.றிஸ்வி (மஜீதி) BA (Hons), PGDE, MA, CTHE, MPhil, PhD (Rd) இஸ்லாமிய கற்கைகள் துறை, சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்
HAYA PUBLICATION













Reviews
There are no reviews yet.