Description
ஷரீஆவின் பார்வையில்
திருமணம்
பேசுதலும் வாக்குறுதியும்
மிஷ்காத் ஆய்வு நிறுவனம் – கொழும்பு
குடும்ப வாழ்வின் முதலாவது கட்டம் துணைத் தெரிவாகும். அதாவது ஆணும் பெண்ணும் தமக்குப் பொருத்தமான துணையை தெரிவு செய்து கொள்வதே இதன் பொருளாகும். இந்த முதலாவது கட்டம், அதாவது துணைத் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அல்குர்ஆனும் ஸுன்னாவும் மிகத் தெளிவாகவே விளக்கியுள்ளது. அந்த வழிகாட்டல்கள் தெளிவாகப் பின்பற்றப்படாத போது திருமணத்தின் முதலாவது கட்டமே பிழைத்துப் போகும். அப்போது முதற் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் குடும்ப வாழ்வே முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்ததாகப் போகும். இப்பின்னணியில் விவாக ரத்துக்கள் அதிகரிக்கின்றமைக்கு இப்பகுதி அதாவது துணைத் தெரிவு சீராக இன்மை ஒரு முக்கிய காரணம் எனக் கொள்ள முடிகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே இந்த புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வகையில் இப்புத்தகத்தின் சிந்தனை பரவலாகுவதில் குடும்ப வாழ்வை பலப்படுத்துவதற்கு ஒரு பங்களிப்பைச் செய்ய முடியும் என கருதுகிறோம்.
குடும்ப வாழ்வு பற்றிய ஆரம்ப நூல் இதுவாகும். தொடர்ந்து இப்பகுதி ஆராயப்பட்டு நூல்களாகவும் ஆய்வுகளாகவும் கட்டுரைகளாகவும் வெளிவருதல் மிக அவசியமாகும். சமூகம் இப்பகுதியில் ஆழ்ந்து கவனம் செலுத்துவது மிகப் பெரும் முக்கியத்துவம் பெற்ற ஒரு விடயமாகும். ஏனெனில் குடும்பம் பொதுவாக இஸ்லாமிய வாழ்வின் அடித்தளம் எனக் கொள்ளப் படுகின்றதாயின் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் போது குடும்பமே அவர்களது தனித்துவத்தை பாதுகாப்பதில் பெரும் பங்களிப்பு செய்யும் நிறுவனம் என்பது உணரப்பட வேண்டும். சிறுபான்மையாக வாழும் எமக்கு அந்த அறிவு பலத்தையும் நடைமுறைப்படுத்தும் மனநிலையையும் அல்லாஹ் தருவானாக எனப் பிரார்த்தித்தவாறே முஸ்லிம் சமூகத்திற்கு இந்நூலை சமர்ப்பிக்கிறோம்.
MISHKATH RESEARCH INSTITUTE COLOMBO













Reviews
There are no reviews yet.