Description
இலங்கை முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கல்வி
எட்டு தசாப்த ஏற்ற இறக்கங்களும் எதிர்காலத்திற்கான சில பரிந்துரைகளும்
சிந்தனைவெளியில் உலா வந்தவாறே, நடைமுறை உலகின் தேவைகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வு மிக்கவர் கலாநிதி றவூப் ஸெய்ன், ஒயாத எழுத்தியக்கத்திற்குச் சொந்தக்காரரான அவர், இதுவரை 70 நூற்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். கல்வித் துறையில் மிக நீண்டகாலமாக ஆர்வத்தோடும் சமூக அக்கறையோடும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தப் பின்புலத்தில், ‘இலங்கை முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கல்வி (1942-2022) எட்டுத் தசாப்த ஏற்ற இறக்கங்களும் எதிர்காலத்துக்கான பரிந்துரைகளும்’ என்ற இந்த நூல் வெளிவருகிறது. இந்த நூல் மூலம், தனது 20 ஆண்டுகால உழைப்பையும் ஆய்வுத் தேடலையும், அறிவுப் புலத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.
மேம்போக்கான புரிதலோடு எதையும் பேசும் போக்கை மறுத்து, ஆய்வு முடிவுகள் மூலம் குறிப்பாக பரிந்துரைகள் மூலம்- முஸ்லிம் மக்களது உயர்கல்வி மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார். உயர் கல்வி என்பது அறிவினது திரட்சி- சமூக மாற்றத்தின் அச்சாணி, அதை சமகாலத் தேவைகளுக்கேற்ற விதத்தில் காலப் பொருத்தமான, வித்தியாசமான பல்வேறு தலைப்புகள் மூலம் – உரையாடலாக மாற்றுகிறார்.
சமூக மாற்றத்திற்கான விதைகளை- வழி வரைபடத்தை (Roadmap) உட்பொதித்து வைத்திருக்கும் (Embedded) ஆய்வுகளே உயிர்ப்பு மிக்கவை. இந்த ஆய்வு நூலில், அந்த உயிர்ப்பு இருக்கிறது. இலங்கை முஸ்லிம்களது அடுத்த கட்ட மூலோபாய மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலின் (Stretegic Change Agenda) சத்தும் சாரமும் இந்த நூலில் இருக்கிறது.
சிறாஜ் மஷ்ஹுர் (எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்)
கலாநிதி றவூப் ஸெய்ன் நளீமியா வளாகத்தில் என்னிடம் சில காலம் கற்றிருக்கிறார் என்பதையிட்டு பெருமிதமடைகிறேன். அங்கு அவர் கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே ஈர்ப்பு மிக்க மொழி அவரிடம் கைகூடியது. ஆழ்ந்த தேடல், கவர்ச்சியான உரை, தொகுப்பாற்றல், பகுப்பாற்றல், செறிவான தரவுக்கையளிக்கை இவையெல்லாம் அவரிடம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளதை அவரது எழுத்து வெளிப்படுத்தி நிற்கின்றது. தனது வயதை விட அதிகமாக சுமார் எழுபது நூல்களை அவர் அறிவுலகத்திற்கு வழங்கியுள்ளார்.
பேராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம் மஸாஹிர் (இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)
Rs. 1500/-













Reviews
There are no reviews yet.