Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

Muslims` Contribution to National Life

රු1,000.00
Next

ரூபித் தீவு | Ruby Theevu

Original price was: රු1,300.00.Current price is: රු1,235.00.
Next Product Image

இலங்கை முஸ்லிம் வரலாறு | History of Sri Lankan Muslim

රු800.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

இலங்கை முஸ்லிம் வரலாறு | History of Sri Lankan Muslim

வரலாறு ஒரு கலை என்று வாதித்தவர்களும் வரலாற்றில் இருந்தனர். இன்னும் இருக்கின்றனர். இலக்கியம் படைப்பது போன்று புராணங்களையும் கற்பனைக் காவியங்களையும் படைத்து அதற்கு வரலாற்று முலாமைப்பூசும் முயற்சிகளை அவர்கள் ஆதரித்து வந்தனர். துரதிஷ்டம் அந்த கற்பனைகள் இன்று அரசியலுக்காக நிஜ வரலாறாக நம்பவைக்கப்பட்டு பள்ளிக் கூடப் பாடத்திட்டமாகக் கற்பிக்கிறார்கள்.

வரலாற்றில் கலையம்சங்கள் ஓரளவுக்கு உள்ளது என்பது உண்மையாயினும் இன்றைய பிரமிப்பூட்டும் மனித ஆய்வுகளின் பெறுபேறாக வரலாற்றை அறிவியல் ரீதியில் அணுகவும் கையாளவும் புதிய பாதைகள் திறக்கப் பட்டுள்ளன. இலக்கிய மூலாதாரங்களுக்கு அப்பால் செப்பேடுகள், நாணயங்கள், கல்லறைகள், ஓலைகள், கல்வெட்டுக்கள் பயன்பாட்டிலிருந்த உலோகப் பொருட்கள் போன்ற தொல்லியல் ரீதியான ஆய்வுகளில் அதிகபட்ச அறிவியல் முறைகளைக் கையாண்டு வரலாற்று உண்மைகளைக் கண்டடையும் புதிய செல்நெறிகள் தோற்றம் பெற்றுள்ளன. ஆக முறையான வரலாற்று வரைவியல் அறிவும் விஞ்ஞான நுணுக்கங்களும் இத்துறை சார்ந்தோருக்கு மிக அவசியம்.

இந்தப் பின்னணியில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று வரைவியலை இந்நூல் ஆராய்கிறது. முஸ்லிம் வரலாறு எப்போது துவங்குகிறது? இதுகாறும் எழுதப்பட்ட வரலாற்று நூல்களின் உள்ளடக்கம் எத்தகையது ? வரலாற்று எழுதுகையில் நிலவும் இடைவெளிகள், போதாமைகள், பிரச்சினைகள் எவை ? என்பவற்றை ஆராயும் இந்நூல் சோனகர்கள், துலுக்கர்கள், மரைக்காயர்கள், மூர் போன்ற குழுக்களின் வரலாற்றையும் பேசுகின்றது. இலங்கை முஸ்லிம் வரலாற்றுக்குப் பங்களித்தோர் மற்றும் அவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் இந்நூல் ஆராய்கிறது.

சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம்

Additional information

Weight 0.140 kg
Dimensions 20 × 30 × 3 cm
Author

கலாநிதி றவூப் ஸெய்ன்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலங்கை முஸ்லிம் வரலாறு | History of Sri Lankan Muslim”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com