Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்)

රු1,000.00
Next

சின்னச் சின்ன மின்னல்கள்

Original price was: රු585.00.Current price is: රු526.50.
Next Product Image

அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு

Original price was: රු1,625.00.Current price is: රු1,465.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

முஹம்மதின் முகஒளி நிகரற்ற கண்ணாடியாம் – கனவிலும் நனவிலும் காணமுடியாததாம் – இந்த – அந்த – எந்தத் தயாரிப்பாளரும் எழிலாய்ச் செய்ய இயலாததாம் – முஹம்மத் (ஸல்) அவர்கள் இளைஞர்திலகமாகத் திகழ்ந்தார்கள். அழகும் பொலிவும் வாய்க்கப்பெற்றிருந்தார்கள். சிறிதே மங்கலான சிவப்பு மேனி, ஒளிசிந்தும் ஓரளவு வட்டமான முகம், உயரமோ குள்ளமோ இல்லாத நடுத்தர உயரம், கனமான தலை, சுருண்ட கருமையும் அடர்த்தியும் கொண்ட முடி, அசாதாரண தோற்றத்துக்கு மேலும் அழகூட்-டும் அகலமான நெற்றி, சற்று வளைந்து அடர்த்தியாகவும் தனித்தனியாகவும் காட்சி தரும் மெல்லிய புருவங்கள், பொருத்தமான மூடிகளாக அகன்ற இமைகள், வெண் திரையில் கருமணியாகக் கண்கள், காண்பவரை ஈர்க்கும் வண்ணம் வெண்மையில் சிவப்புக் கோடுகள், வெட்கமும் நாணமும் கலந்து மனதைக் கவரும் சூதுவாதில்லாத பார்வை, நீண்டு உயர்ந்த மூக்கு, இதமான மொழி பேசும் இதழ்கள், புன்னகை தவழும் முகம், முகத்தில் ஒளிவிடும் தாடி, அழகான நீண்ட கழுத்து, விரிந்த மார்பு, உயர்ந்த தோள்கள், உறுதியான கைகள், அகலமான மணிக்கட்டுகள், விரிவாகவும் மிருது-வாகவும் விளங்கிய உள்ளங்கைகள், பொருத்தமான நீளங்-கொண்ட விரல்கள், இலேசாக உருண்டு திரண்ட கால்கள், பெயரளவுக்கு சதைப்பற்று கொண்ட குதிகால்கள், குழிவான உள்ளங்கால்கள், ஓரளவு முன்பக்கம் குனிந்து அழுத்தி வைத்து நடக்கும் பாதங்கள், வேகமாக நடந்து பள்ளத்தை நோக்கி இறங்குவது போன்ற நடை. இவைதாம் முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்களின் முகம் சிந்தனையோட்டத்தைக் காட்டும். அதில் உயர்வான உணர்ச்சிகளும் தூய்மையான எண்ணங்களும் பிரதிபலிக்கும். பார்ப்பவர்கள் முதல் பார்வையிலேயே ஈர்க்கப்பட்டு விடுவார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்டதாலேயே கதீஜா (ரலி) அண்ண-லாரைக் கணவராகப் பெற்றார்கள். கதீஜாவின் நெருக்கம் அண்ணலாருக்கு இனிமையாகவும் சுகமாகவும் இருந்தது. அறிவும் ஆற்றலுமிக்க கதீஜா (ரலி) அண்ணலாரின் குணமறிந்-தும் செயலறிந்தும் நடந்து கொண்டார். அண்ணலாரின் விருப்பையும் வெறுப்பையும் அவர் நன்கறிந்திருந்தார். அண்ணலாரின் ஆசைகளையும் ஈடுபாடுகளையும் நன்கு விளங்கிய கதீஜா (ரலி) அனைத்துவிதமான வசதிகளையும் செய்துகொடுக்க ஆயத்தமாக இருந்தார். அண்ணல் (ஸல்) அவர்களின் குணநலன்கள் என்ன? உண்மை பேசுதல், ஒவ்வொரு வேலையையும் நேர்மை-யுடன் செய்தல், வம்புகளை விட்டு விலகியிருத்தல், சண்டை-சச்சரவுகளைத் தவிர்த்தல், தனிமையில் அமர்ந்து சிந்தனை செய்தல் போன்ற அண்ணலாரின் விருப்பங்களை எல்லாம் கதீஜா (ரலி) நன்கு கவனித்து, அதற்கேற்றாற்போல் நடந்துகொண்டார். மணம் முடித்தபின்பும் அண்ணலாரின் பழக்கவழக்கங்-களில் மாற்றம் வரவில்லை. தொடக்க காலங்களில் திறந்த-வெளிக்குச் சென்றதுபோல் இப்போதும் சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளித்தார்கள். ஆடு மேய்க்கும் பணி இப்போதில்லை என்பதால், எப்போதும் அண்ணலார் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க வாய்ப்புக் கிடைத்தது. மேலும் கீழும் பார்க்கக் கிடைத்த இயற்கையின் இயக்கங்கள் இறைச்-சான்றுகளை எடுத்துரைத்தன. அது சத்தியத்தை நோக்கிய பயணமாக அமைந்தது. பாட்டனார் இப்ராஹீம் (அலை) அன்று பயணித்த இயற்கையான வழித் தடத்தை நோக்கியே அண்ணலாரின் கால்கள் நடந்தன. அறிவு, ஞானம், இறை ரகசியம், நம்பிக்கை, உறுதி எனும் படிகளில் நடந்து அண்ணலார் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.

Additional information

Weight 0.354 kg
Dimensions 20 × 30 × 10 cm
Author

MOULANA ABU SALIM ABDUL HAI

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com