Description
எது முதலில் ?
டாக்டர் யூசுப் அல் கர்ளாவி
தமிழில் : பேராசிரியர் கே.எம்.இல்யாஸ் ரியாஜி, M.A.,
வெளியீடு: வேர்கள்
‘எதை முதலில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது மிகவும் முக்கியமானதாகும்….
நம்மைப் படைத்த அல்லாஹ்வால் நமக்காக அனுப்பப் பட்ட அறுதி நபி (ஸல்) அவர்கள். இந்த எது முதலில்?’ கலையில், மிகவும் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதை பெருமானார் (ஸல்) அவர்கள் நபித்துவ வாழ்க்கை. யின் எடுத்த திருப்புமுனை முடிவுகளிலிருந்து தெரிந்திடலாம்.
அதனால்தான் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இந்த உலகை காலமெல்லாம் புரட்டிப்போடும் அடிப்படை வேலைகள், அனைத்தையும் செய்தார்கள். முடித்தார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் 23 ஆண்டு காலத்தில் செய்தவற்றைப் பார்த்து, மலைத்த பல ஆய்வாளர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் நபிகளாக வாழ்ந்த காலம் 23 ஆண்டுகளா? அல்லது 230 ஆண்டுகளா? என மலைக் கின்றார்கள்.
ஆனால் காலப்போக்கில் முஸ்லிம்கள் முக்கியமில்லாத விஷயங்களை விவாதிப்பதிலேயே நேரத்தை வெகுவாகப் பாழாக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போதும் இது நடக்கின்றது.
ஆனால் எதிர் திசையில் இஸ்லாத்தின் எதிரிகள் அனை வரும் உலக அளவில் அணி சேர்ந்துள்ளனர். இஸ்லாத்திற்கு எதிராகச் சதிகளைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றனர். இதனை நவீன சிலுவை யுத்தம் என்றும், சிலுவைப் போர் 2.0 என்றும் அழைத்து வருகின்றனர். இந்தச் சதிகளை முறிய டிப்பதைப் பற்றி எங்கேயும் விவாதங்களைக் காணோம்.
இந்நிலையில்தான் பேராசிரியர் இல்யாஸ் ரியாஜி அவர்கள் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களின் எது முதலில்? என்ற நூலை அரபு மூலத்திலிருந்து கண்டெடுத்து தமிழில் தந்தார்கள். அதனை “வைகறை வெளிச்சம்” மாத இதழில் தொடராக வெளியிட்டோம். தொடக்க காலத்திலேயே வாசகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றது.
ஒரு கட்டத்தில் அன்று வரை ‘வைகறை வெளிச்சம்’ மாத இதழில் தொடராக வந்தவற்றை நாம் ஒரு சிறு நூலாக வெளியிட வேண்டிய தாயிற்று. காரணம் வாசர்கள் சிலர் காட்டிய ஆர்வம், அவசரம்,
இப்போது வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க அனைத்தை யும் அடக்கிய முழு நூலாக இதனை வெளியிட்டிருக்கின்றோம்.
– பதிப்புரையிலிருந்து













Reviews
There are no reviews yet.