Description
நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்
இஸ்லாம், அமெரிக்கா, தீவிரவாதத்திற்கெதிரான உலகளாவிய போர் குறித்த மறைமுக திட்டங்களின் விரிவான ஆய்வு
மஹ்மூத் மம்தானி
தமிழில்: அ. குமரேசன்
(தலைமை செய்தியாளர், தீக்கதிர் நாளிதழ்)
கிளர்ச்சியையும் சிந்தனையையும் தூண்டுகிற இந்தப் புலன் விசாரணை கடுமையான, ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறது. சம காலத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகளைப் புரிந்து கொள்வதற்கான மதிப்புமிக்கதோர் பங்களிப்பு இந்நூல்.
-நோம்சாம்ஸ்கி
ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுத்தாளர்
9/11 தாக்குதலுக்கு எதிரொலியாகத்தான் இராக் -ஆஃப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் செய்து ‘தீவிரவாதத்துக்கெதிரான போர்’ என்ற புதிய கலைச் சொல்லை உருவாகிவிட்டது. இது கோத்ரா ரயில் எரிப்பின் எதிர் வினையாகத்தான் குஜராத் இனக்கலவரம் நிகழ்ந்தது என்பதை நம்பும் அறியாமையை போன்றது.
இதைப்போலவே அமெரிக்காவின் உலகளாவிய தீவிரவாதத்திற்கெதிரான போருக்கான காரணத்தை பனிப்போரின் பின்னணியிலும் ஆங்கிலேயர்கள் வரலாற்றின் அமெரிக்காவை ஆக்கிரமித்த பின்னணியிலும் தேடவேண்டும் என்கிறார் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மஹ்மூத் மம்தானி.
இது எண்ணெய்க்கான ஏகாதிபத்தியப் போரா?
சமகால சிலுவை யுத்தமா? / நாகரிகங்களின் மோதலா?
நவீன காலனியாதிக்கச் சண்டையா?
இந்தக் கேள்விகளுக்கும் ரஷ்யாவுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட போராளிகள் (நல்ல முஸ்லிம்), எப்படி தீவிரவாதிகளாக (கெட்ட முஸ்லிம்) மாறினர் என்பதற்கும் இந்த நூல் விரிவாக பதில் தருகிறது.
நாணல்













Reviews
There are no reviews yet.