Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

Zakat – A Practical Guide

රු750.00
Next

மனிதநேயத் தூதர் முஹம்மத் (ஸல்)

රු400.00
Next Product Image

மதத்தைத் துறத்தலும் மத நிந்தனையும் -ஒரு பார்வை

රු200.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

மதத்தைத் துறத்தலும் மத நிந்தனையும் -ஒரு பார்வை –

உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர்

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் -கொழும்பு

அல்குர்ஆன், நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தைத் தழுவி விட்டு மார்க்கத்தை மாற்றிக் கொள்வதற்கான உலகத் தண்டனை எதனையும் குறிப்பிடவில்லை. மறுமையின் தண்டனையைத்தான் சொல்லியிருக்கிறது. இவ்வாறு அல் குர்ஆன் மத மாற்றத்திற்கான தண்டனைகள் எதனையும் குறிப்பிடாமை கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்திய அதன் சிந்தனைப் போக்கின் விளைவாகும்.

சுன்னாவைப் பொறுத்தவரையில் மார்க்கத்திற்கு எதிராசுப் போராடல் என்ற நோக்கமின்றி சாதாரணமாக நிகழும் கருத்து மாற்றம் என்ற வகையில் ஒருவர் மார்க்கத்தை விட்டு வெளியேறினால் அது தண்டனைக்குரிய குற்றமன்று என்பதனையே இறைத்தூதர் (ஸல்) அவர்களது நடைமுறை எமக்குக் காட்டுகிறது.

மனித சமூகத்தில் காணப்படும் பன்மைத்துவத்தை ஏற்று மனித சகோதரத்துவத்தை இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது. இதற்கு எதிரான நிலையும் அதேவேளை மனித சகோதரத்தை உடைத்துவிடும் போக்கும் கொண்டதுமே மத நிந்தனையாகும். சமூகங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் மத்தியிலான மோதல்களை உருவாக்கி மனித சமூகத்தையே துண்டாடி விடும் நிலையையே மத நிந்தனை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாத்தின் அடிப்படைச் சிந்தனைகளின் பின்னணியில் மத நிந்தனை என்பது பல வகையில் இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக அமைகிறது. அது வார்த்தைகள் மூலமான வன்முறையாகும். எனவே அதனை ஒரு குற்றச் செயலாகக் காண்பதே ஏற்புடையதாகும். ஒரு செயலைக் குற்றமாகக் காணும் போது அதற்குத் தண்டனை வழங்கப்படுவதையும் இஸ்லாம் அனுமதிக்கிறது. அத்தண்டனை, இக்குறிப்பிட்ட குற்றத்தைப் பொறுத்த வரையில் வரையறுக்கப்பட்ட தண்டனையன்று. அது குற்றம் செய்த நபர், சூழல், குற்றத்தின் பாரதூரம் என்பவற்றைப் பொறுத்து நீதிமன்றம் தீர்மானிக்கும் தண்டனையாகும். இது முஸ்லிம், முஸ்லிமல் லாதவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே அமையும். இதுவே இஸ்லாத்தின் பரிபாஷையில் ‘தஃஸீர்” என்ற  வரையறுக்கப்படா தண்டனையாகும்.

Additional information

Weight 100 kg
Dimensions 20 × 20 × 20 cm
Author

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர்

Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “மதத்தைத் துறத்தலும் மத நிந்தனையும் -ஒரு பார்வை”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com