Description
சீட்டுக் கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்
விழியன் & சரண்யா
‘விழியன் – சிறார் எழுத்தாளர், கணித ஆர்வலர், சென்னை. சரண்யா – ஆசிரியர், கணித ஆர்வலர், சென்னை.
சீட்டுக்கட்டுகள் என்றாலே ஆபத்தானவையா?
சீட்டுக்கட்டுகளுடன் விளையாட்டு என்றாலே அது ஆபத்தானது. அதனைப்போய் எப்படிக் குழந்தைகள் கையில் கொடுக்கலாம் எனச் சிலர் அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு. சீட்டுக்கட்டுகள், கணிதம் கற்றுக்கொள்ள மிக நல்ல கருவி. அட்டகாசமான துருப்புச்சீட்டு. அது பல எளிய விளையாட்டுகளால் நிரம்பியது.
ஏராளமான அடிப்படைக் கணிதங்களைக் கற்றுக்கொடுக்கும் வல்லமை கொண்டது. அதே போல நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது. காலந்தோறும் வேறு வேறு வடிவங்களை எடுத்துள்ளது. வேறு வேறு கைகளில் தவழ்ந்துள்ளது.
எதையும் நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். எப்படிக் கையாள்கிறோம் என்பதில் அதன் சாரம் அடங்கியுள்ளது. வாங்க, ஒரு கை பார்ப்போம்.






Reviews
There are no reviews yet.