Description
ஒரு குடம் கண்ணீர்
“ஒரு சிறுகதையோ என்று மயங்குமளவு இச்சம்பவங்களுடன் நடைபயிலும் எழுத்துகளின் அழகு யதார்த்தத்தின் அவலங்களா கற்பனையா என்று மருட்சிக்குள் எம்மை இட்டுச் செல்வது உண்மை. ஆனால் இவை கற்பனைகள் அல்ல. கற்பனையையும் தோற்கடிக்கும் இரத்தத்தை உறைய வைக்கும் உண்மைகள்.
இலக்கியமாகவும் ஆவணமாகவும் தன்னை வெளிப்படுத்தும் இந்நூல் தமிழில் ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கக் கூடும். உமது காலத்தில் உலக அரசியல். ஜனநாயகம், புதிய உலக ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பில் இந்நூல் ஏற்படுத்தும் தாக்கமும் எழுப்பும் கேள்விகளும் மனிதர்கள் என்ற ரீதியில் பதில் தருவதைக் கட்டாயப்படுத்துகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாறும் அதற்கு முற்பட்ட வரலாறும் விட்டுச் சென்றுள்ள பிரச்சனைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வற்றை எமக்கு நினைவு படுத்துவதே இந்நூலின் மிகப்பெரிய பங்களிப்பாகும்.”
பேராசிரியர் எம். எஸ்.எம். அனஸ்
(மெய்யியல் துறைத் தலைவர் (ஓய்வு) -பேராதனைப் பல்கலைக் கழகம்)
-இந்நூல் ஈழத்து இலக்கியச் செல்நெறியில் ஒரு முக்கியமான இலக்கிய ஆவணம். ஈழத்து இலக்கியம் இதுவரை சந்தித்த நூல்களை விட இந்த நூல் உள்ளடக் கத்தில் வித்தியாசமானது. இக்கதைகள் சொல்லப்படும் முறையில் சம்பவங்கள் அமைக்கப்பட்ட முறையில் அவை இலக்கிய அந்தஸ்தைப் பெற்று விடுகின்றன. இங்கேதான் அஷ்ரஃப் தான் ஒரு கைதேர்ந்த எழுத்தாளன் என்பதை எமக்கு உணர்த்துகிறார்.”
-‘சாஹித்ய ரத்னா தி. ஞானசேகரன்
(எழுத்தாளர் -ஆசிரியர். ஞானம் சஞ்சிகை)
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு நாடுகளில் அரசுகளின் சித்திரதைக்கு ஆளாகவர்களின் நேரடிப் பதிவுகள். ஒரு மரத்தையும் கூட மனித உரிமைப் போராளியான ஆக்கி விடும் எழுத்து அஷ்ரஃபுடையது. நாகரிக நாடுகளின் முழு முகத்தை நம் கண் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்துகிறது. இன்னும் தொடரும் கதை இது,”
-செ.ச, செந்தில்நாதன்
(இந்தியா டுடே – ஆகஸ்ட் 17, 2010




Reviews
There are no reviews yet.