Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்

Original price was: රු3,750.00.Current price is: රු3,375.00.
Next

அல்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்| True Stories From The Holy Qur’an

රු550.00
Next Product Image

முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களது வாழ்வு

Original price was: රු2,350.00.Current price is: රු2,235.00.

Sale!
Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

மூலாதார நூல்களின் அடிப்படையில்
முஹம்மத்
صلى الله عليه وسلم
அவர்களது வாழ்வு

மார்டின் லிங்ஸ் (ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜுத்தீன்)

 

எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் அறபிய மூல கிரந்தங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்நூல். நபிகளார் கூறியவற்றைக் கேட்டவர்களும் அன்னாரது வாழ்க்கையோடு இணைந்திருந்தவர்களும் அளித்துள்ள விவரணங்கள் தெளிவுற அமைக்கப் பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் சில முதன் முறையாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளமையை இந்நூலில் காணலாம். ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜுத்தீனின் விவரணத்திறன் அலாதியானது. தான் கூற வந்த பொருளை எளிமையாகவும் திறம்படவும் வாசிப்போர் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையிலும் அழகுற விவரித்துச் செல்கின்றார். ஏற்கெனவே நபிகளாரின் வாழ்வு குறித்து அறிந்தோர் மட்டுமன்றிப் புதிதாக அப்பெருவாழ்வு குறித்து அறிய விழைபவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்தது இந்நூல்.

அட்டையில் முன்புறம் மேல்: நபிகளார் மீதான போற்றுதல் வாசகம்.

கீழ்: இஸ்தான்பூல் நீலப் பள்ளிவாசலில் நபிகளாரதும் அன்னாரது உயர் தோழர்கள் பதின்மரதும் பெயர்கள் பொறிக்கப்பட்ட கூபி அக்ஷர அலங்காரம் (பார்க்க அத்LXXXII ஆரம்பம்). பின் அட்டை: ஏகத்துவம் குறித்த ஸூறா-கு.112-கூபி (பார்க்க. அத்XXIIIஇறுதி) அக்ஷரத்தில்.

 

ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜுத்தீன் (கலாநிதி மார்டின் லிங்ஸ் ) ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் கலைத் துறைப் பட்டம் பெற்றுப் பன்னிரண்டு வருட காலம் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1952-ல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று லண்டன் பல்கலைக் கழகத்து அறபு மொழிப் பட்டம் பெற்றார். பிரித்தானிய தொல்பொருளகத்தின் அறபியக் கையேடுகளின் விசேட பொறுப்பாளராக 1955 முதல் பணியாற்றிய அவர், 1970 முதல் 73 வரை கீழைத்தேயக் கையேடுகளின் பொறுப்பாளராக விளங்கினார். 1974 முதல் 76 வரை இஸ்லாமிய உலக விழா நிதியத்து ஆலோசகராகவும் ‘இஸ்லாமிய கலைக் கண்காட்சி’க் குழுவின் ஓர் அங்கத்தவராகவும் பணி புரிந்தார். 1977-ல் அப்த்-அல்-அஸீஸ் மன்னர் பல்கலைக்கழகத்து அழைப்பின் பேரில் மக்காவில் நடந்த இஸ்லாமியக் கல்வி மாநாட்டில் பங்கு பற்றினார்.

பல்வேறு மொழிகளில் வெளி வந்துள்ள இஸ்லாமிய மறை ஞானம் பற்றிய அவரது மூன்று நூல்களுக்கும் மேலாக, Shakespeare in the Light of Sacred Art, Ancient Beliefs and Modern Superstitions, Quranic Art of Calligraphy and Illumination நூல்களையும் அவர் எழுதியுள்ளார். இரு கவிதைத் தொகுப்புகளும் அவரால் வெளியிடப் பட்டுள்ளன. ஏராளமான அவரது ஆய்வுக் கட்டுரைகள் Studies in Comparative Religion, The Islamic Quarterly, The New Encyclopaedia of Islam, Encyclopaedia Britannica முதலிய வெளியீடுகளில் பிரசுரமாகியுள்ளன.

Additional information

Weight 0.865 kg
Dimensions 20 × 35 × 5 cm
Author

மார்டின் லிங்ஸ்

Language

Tamil

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களது வாழ்வு”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com