Description
பாலைவனச் சிங்கம்
உமர் முக்தார்
ஏ.எம். யூசுப்
நாணல்
லிபியாவை 1912ல் இத்தாலி ஆக்கிரமித்தது. இந்த காலனியாதிக்கத்தை எதிர்த்து உமர் முக்தார் இத்தாலிக்கு எதிராக கொரில்லா யுத்தத்தை மேற்கொண்டார். முசோலினிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த உமர் முக்தார் நடத்திய இந்த விடுதலைப் போர் சுமார் 20 ஆண்டுகள் நீடித்தது. அன்று உலகின் மிகவும் பலம் பொருந்திய பெனிட்டோ முசோலினி உமர் முக்தாரின் போர் தந்திரத்தை புரிந்து கொள்ள முடியாமல் திக்கு முக்காடிப் போனார்.
மதரஸாவில் குர்ஆனை போதிக்கும் ஒரு சாதாரண ஆசான் தான் உமர் முக்தார். ஆனால், யுத்தக் களத்தில் மிகச் சிறந்த கொரில்லா போர் தந்திரங்களை கையாண்ட மாவீரராக விளங்கினார். தனது போர் தந்திரங்கள் மற்றும் தாக்குதல்களின் மூலம் இத்தாலிய படையை நிலைகுலைய செய்தார் உமர் முக்தார்.
இத்தாலிக்கு எதிராக 20 ஆண்டுகள் இவர் மேற்கொண்ட கொரில்லா யுத்த முறையையும் லிபியாவின் அன்றைய அரசியலையும் மூன்று மணி நேர திரைப்படங்களில் காட்டிவிட முடியாது. இக்குறையை தனது எழுத்தின் மூலம் நீக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் நாவலர் A.M. யூசுப்.













Reviews
There are no reviews yet.