Description
டாகடர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்
அஷ்ரஃப் சிஹாப்தீன்
“எண்ணாயிரம் கர்ப்பவதிகளுக்கு மகப்பேற்று அறுவைச் சிகிச்சை செய்தார் என்றும் அதில் நான்காயிரம் பெரும்பான்மை இனப் பெண்களுக்கு வேண்டுமென்றே கருத்தடை செய்தார் என்றும் முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச் சாற்றுகளைத் துணிவுடன் எதிர்த்துப் போராடித் தான் குற்றமற்றவன் எனச் சட்டப்படி நிரூபித்த டாக்டர் ஷாபி சிகாப்தீனின் கதை இது.
நாடு முழுவதும் பதற்றம் நிலவிய கால கட்டத்தில் தீ போல் பரவிய பொய்களையும் இட்டுக்கட்டுகளையும் தாண்டி வந்த டாக்டர் ஷாபி.
அவற்றை எதிர் கொண்ட விதம் பற்றி இதில் சொல்லிச் செல்கிறார்.
பல்துறை ஆளுமையும் பன்னூல் ஆசிரியருமான அஷ்ரஃப் சிகாப்தீன் ஊடகத்துறையில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்.
அவரது எழுத்து நடை வசீகரம் மிக்கது. அவர் தனது கவிதைகளுக்காக இரண்டு முறையும் மொழிபெயர்ப்புத் தமிழுக்காக மூன்று முறையும் அரச சாஹித்திய தேசிய விருது பெற்றவர்.
தனித்துவமான அவரது பாணியில் டாக்டர் ஷாபியின் உணர்வுகளைப் படிப்போர் லயிக்கும் வகையில் வண்ணக் கலவையாகப் பிரதிபலிக்கிறார்.
தமிழ் மொழியில் இவ்வாறான நூல்கள் மிக அபூர்வமானவை.
படிக்கத் தொடங்கினால் இந்நூல் உங்களைக் கட்டிப் போடும் தன்மை வாய்ந்தது. இந்நூலை இவ்வாறு தெளிவுற எழுதித் தமிழுக்கு அளித்துள்ள கவிஞர் அஷ்ரஃப் சிகாப்தீன் அவர்களுக்குத் தமிழுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
-‘தமிழ்மாமணி’ அல் அஸுமத் –
(கவிஞர் – நாவலாசிரியர் – மொழிபெயர்ப்பாளர்)








Reviews
There are no reviews yet.