Welcome to Marutham Online Store
Islandwide Delivery
Verified Local Merchant
Checked & Packed with Care
Previous
Previous Product Image

இஸ்லாமிய சட்டங்கள், சுத்தம்: மத்ஹபுகளுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு

Original price was: රු900.00.Current price is: රු855.00.
Next

இஸ்லாமிய ஷரீஆ – யதார்த்தமும் பிரயோகமும்

රු400.00
Next Product Image

வாரிசுரிமைச் சட்டம்

රු400.00

Rated 0 out of 5
(0 customer reviews)

In stock

Description

MISHKATH கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம் வாரிசுரிமைச் சட்டம் அமுலில் இருந்த போதிலும், முஸ்லிம் சமூகத்தினால் சரியாக அச்சட்டம் பின்பற்றப்படாதிருப்பது பரவலாக அவதானிக்கப்படும் ஓர் உண்மையாகும். இதன் விளைவாக குடும்பம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்தவகையில், இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் இனங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்தளவு தூரம் நடைமுறையாகிறது என்பதைக் கண்டறிய மிஷ்காத் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கள ஆய்வின் முடிவுகள் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் குறித்து முஸ்லிம்கள் கரிசனையற்று இருப்பதனையும், அது பற்றிய போதிய தெளிவற்றிருப்பதனையும் உணர்த்தின. அல்குர்ஆன் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்திய சட்டங்களில் ஒன்றான வாரிசுரிமைச் சட்டத்தைப் புறக்கணிக்கும் ஆரோக்கியமற்ற நிலை இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் தேவையை உணர்த்தியது. இதன் விளைவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இலகு நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் குறித்த கோட்பாட்டுத் தெளிவைத் தருவதோடு, இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் தொடர்பாக இலங்கைச் சூழலில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தெளிவுகளையும் முன்வைக்கிறது. அத்தோடு, இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் முஸ்லிம் வாரிசுரிமைச் சட்டத்தின் தோற்றம், இலங்கையில் அதன் நடைமுறைகள் குறித்தும் இந்நூல் ஆராய்கிறது. துறைசார்ந்தோரை உள்ளடக்கிய ஆய்வுக் குழுவொன்றினால் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஷரீஆத்துறை மாணவர்கள், உலமாக்கள், சட்டத்துறை சார்ந்தோர் உட்பட பொதுவாக அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்.

MISHKATH RESEARCH INSTITUTE-COLOMBO

Managed By MRCS Research & Consultancy Services (Pvt) Ltd.
No.18 Mount Pleasant, Baseline Road,
Colombo 09 9786249 265318

Additional information

Weight 162 kg
Dimensions 20 × 20 × 20 cm
Author

Dr.Arafath Kareem

Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாரிசுரிமைச் சட்டம்”

Your email address will not be published. Required fields are marked *

Marutham Books

286/19H, 3rd Lane, Avissawella Road,
Wellampitiya,
Sri Lanka

+94  753412299

maruthambooks@gmail.com